சண்டி வீரன் படத்துக்கான தடை விலகுமா? இயக்குநர் பதில்

சிங்கப்பூர் காவல் துறையினரால் நிறைவேற்றப்படும் ரோத்தா எனும் தண்டனை...
சண்டி வீரன் படத்துக்கான தடை விலகுமா? இயக்குநர் பதில்
Updated on
1 min read

இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா மற்றும் ஆனந்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சண்டி வீரன் படத்துக்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சண்டி வீரன் படத்தை பார்வையிட்ட சிங்கப்பூர் தணிக்கைக் குழு சிங்கப்பூர் காவல் துறையினரால் நிறைவேற்றப்படும், ரோத்தா எனும் தண்டனை படத்தில் காண்பிக்கப்படுவதால், படம் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதர்வா கூறும்போது, ஆமாம், சண்டி வீரன் படத்தை சிங்கப்பூரில் தடை விதித்துள்ளார்கள். அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். சிங்கப்பூரின் கெளரவத்துக்குக் குறைவாக படத்தில் எந்தக் காட்சியும் வைக்கப்படவில்லை. ரோத்தா காட்சிகளை இங்குள்ள ஸ்டூடியோவில் தான் எடுத்தோம். அங்குச் சென்று எடுக்கவில்லை. ரோத்தா காட்சிகளை வெட்டவும் முடியாது. ஏனெனில், அது காதல் காட்சிகளுடன் தொடர்புடையது. சிங்கப்பூர் அதிகாரிகளிடம் எங்கள் நிலையை எடுத்துக்கூறி தடையை விலக்க முயற்சி செய்வோம் என்றார்.

இது பற்றி இயக்குநர் சற்குணம் கூறும்போது: தடை விரைவில் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இன்னும் ஐந்து நாள்களில் சிங்கப்பூரில் சண்டி வீரன் படம் வெளியாகும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com